5 Interesting Facts About Tamil Isai Sangam .

Tamil Isai Sangam (தமிழ் இசை சங்கம்) யாரால் உருவாக்கப்பட்டது? எப்பொழுது உருவாக்கப்பட்டது ?இப்பொழுது எந்த வகையில் பயனுள்ளதாக உள்ளது?

  • தமிழ் இசை சங்கம் 1943 ஆம் வருடம் ராஜா சார் அண்ணாமலை செட்டியார் அவர்களால் தமிழ் இசையை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ் இசை சங்கம் நிறுவப்பட்டது.
  • தமிழ் இசை தமிழ் பண்பாட்டின் வளர்ச்சிக்காக இசைக்கலைஞர்களை ஒருங்கிணைப்பதில் தமிழ் இசை சங்கம் பங்கு வகிக்கிறது, அதேபோல் ஆண்டுதோறும் தமிழ் இசை கல்லூரி மூலம் அறிஞர்களை உருவாக்கி வருகிறது.
  • தமிழின் பழங்கால இசையான பான் (Paan) இசை ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது, ஆண்டுதோறும் தமிழ் இசையில் புலமைமிக்க தமிழ் அறிஞர்களை போற்றும் வகையில் அவர்களுக்கு “தமிழ் இசை பேரறிஞர்” என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • தமிழ் இசை கல்லூரி மற்றும் தமிழ் இசை சங்கத்தில் இசை சம்பந்தமான அரிய வகை புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன, அதேபோல் அரிய வகை இசைக்கருவிகளையும் தமிழ் இசை சங்கம் பத்திரமாக வைத்து வருகிறது. ஆண்டுதோறும் தமிழ் இசை அறிஞர்களால் எழுதப்பட்டு வரும் நூல்களையும் வெளியிட்டு வருகிறது.
  • தமிழ் இசை கல்லூரி மூலம் பகல் மற்றும் மாலை கல்லூரி வகுப்புகள் நடத்தப்பட்டு அதில் டிப்ளமோ, இளங்கலை படிப்பு,முதுகலை படிப்புகள் என தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை பல்கலைக்கழத்தால் அங்கீகரிக்கப்பட்டு பல தமிழ் இசை அறிஞர்களை உருவாக்கி வருகிறது தமிழ் இசை சங்கம்.