First South India’s Railway Station?

First South India’s Railway Station? தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது? இப்போது இயங்குகிறதா?

சென்னை ராயபுரம் ரயில் நிலையம்- சென்னை புறநகர் ரயில்வே நெட்வொர்க் கட்டுப்பாட்டில் சென்னை கடற்கரை முதல் வாலாஜாபேட்டை வரை செல்லும் ரயில் பாதையில் உள்ள ராயபுர ரயில் நிலையம் ஆகும்.

இந்த ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் அமைந்துள்ள ஹவுரா ரயில் நிலையத்திற்கு பிறகு இந்தியாவில் தற்போது செயல்படும் இரண்டாவது பழமையான ரயில் நிலையம் ஆகும்.

Note: இரண்டு பழைய ரயில் நிலையங்களான பம்பாய் மற்றும் தானேவின் அசல் கட்டமைப்புகள் இப்போது செயல்படவில்லை

அதேபோல் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ஆகும், முதல் ரயில் ஜூன் 1856 இல் ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது. சுமார் 1972 ஆம் ஆண்டு வரை சென்னை மற்றும் தெற்கு மஹரத்தா ரயில் நிலைய தலைமையகமாக இருந்து வந்தது, அதன்பின் எழும்பூருக்கு மாற்றப்பட்டது.

இந்திய துணை கண்டத்தின் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான ரயில் கட்டமைப்பு ராயபுரம் ரயில் நிலையம் ஆகும்.