First Chief Justice Of Madras High Court?

First Chief Justice Of Madras High Court? சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் இந்தியர் யார்? அவரை பற்றி சில விவரங்கள்?

பகல வெங்கட்ராமன் ராஜமன்னார், இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பின்னர் மைசூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்து புகழ்பெற்ற வழக்கறிஞரான திவான் பகதூர் பி. வெங்கட்ராமன் ராவுக்கு மகனாக பிறந்தார்.

சென்னை பச்சைப்பாசில் உயர்நிலைக் கல்வி பள்ளி படிப்பை முடித்து அவர் பிரசிடென்சி கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார், அதன் பின் 1921ல் பி ஏ வில் ஆங்கிலம் மற்றும் தத்துவத்தில் முதல் வகுப்பைப் பெற்றார்.

இவர் நீதிபதி மற்றும் அரசியல்வாதி ஆவார் 1957 முதல் 1958 வரை சென்னை மாநிலத்தின் செயல் ஆளுநராக பணியாற்றினார், சுதந்திரத்திற்கு பிறகு 1948 முதல் 1961 வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் இந்தியர் ராஜமன்னார் ஆவார்.

புதுடெல்லியில் உள்ள சங்கீத நாடக அகாடமியின் முதல் தலைவராகவும் இருந்தார், இவர் 1961 இல் ஓய்வு பெற்றார் அதன் பின் பல Committee (குழுக்களுக்கு) தலைமை தாங்கி அரசாங்கத்திற்கு தீவிர சேவைகளை தொடர்ந்து ஆற்றினார், 1979 ஆம் வருடம் இறந்தார்