Oxford Of South India?

Oxford Of South India?- தென்னிந்தியாவின் Oxford Of South India என்று அழைக்கப்படும் நகரம் எது? அதன் சிறப்புகளும்?

முதன் முதலில் திருநெல்வேலி- நெல்லை- தின்னவேலி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது, இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும்.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலத்துக்கு பிறகு திருநெல்வேலி ஆறாவது பெரிய மாநகராட்சி ஆகும். கன்னியாகுமரிலிருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அதேபோல் இது ஒரு பழமையான நகரம் இதற்கு 2000 ஆண்டுகளுக்கு மேலானதாக பதிவுகள் செய்யப்பட்டுள்ளது, திருநெல்வேலியை பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசு மற்றும் ஆங்கிலேயர்களால் பல காலங்களில் ஆளப்பட்டு உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையிலான பாளையக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் படைகளை உள்ளடக்கிய பாலிகர் போர் வரை இப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

இதில் தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ள பாளையங்கோட்டை திருநெல்வேலி நகர முனிசிபல் கார்ப்பரேஷனுக்குள் இணைக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படுகிறது ஏனென்றால் இதில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை கொண்டிருப்பதாலும் மற்றும் பல முக்கியமான அலுவலகங்களை கொண்டுள்ளது.