ஜவுளி மற்றும் பின்னல் ஆடைகளை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நகரம் எது?

ஜவுளி மற்றும் பின்னல் ஆடைகளை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நகரம் எது?

திருப்பூர் ஒரு முக்கிய ஜவுளி மற்றும் பின்னல் ஆடை மையமாக உள்ளது இந்தியாவில் இருந்து சுமார் 90% பருத்திப்பின்னல் ஆடைகள் ஏற்றுமதிக்கு பங்களிக்கிறது, ஜவுளி துறையில் மட்டும் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது, 2014- 2015 படி சுமார் 200 பில்லியன் இந்திய ரூபாய் ஏற்றுமதி பங்களிக்கிறது.

1970களில் சிறிய உரிமையாளர்கள் ஜவுளி துறையை தேர்ந்தெடுத்தனர், அதன் பின் தொழிலில் ஏற்பட்ட ஏற்றம் நகரத்தை பெரிய ஜவுளி மையமாக வளர்ச்சியடைய செய்தது.

2008ல் திருப்பூர் மாநகராட்சியாக மாறியது அதன் பின் 2009 கோவை மாவட்டம் ஈரோடு மாவட்டத்தில் சில பகுதிகளில் இருந்து தனி திருப்பூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

2010ல் பருத்தி விலை அதிகமாக இருந்ததால் திருப்பூரில் உற்பத்தியாளர்கள் பலர் அவர்களின் தொழிலை நிறுத்த வேண்டி இருந்தது, இதையெல்லாம் தாங்கி திருப்பூர் தமிழகத்தின் முக்கிய வருமான ஆதாரமாக மாறி உள்ளது.