தமிழகத்தின் மூன்று முக்கிய துறைமுகங்கள் எது? அது எங்கு உள்ளது?

தமிழகத்தின் மூன்று முக்கிய துறைமுகங்கள் எது? அது எங்கு உள்ளது

தமிழகத்தின் மூன்று முக்கிய துறைமுகங்கள் சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்

சென்னை துறைமுகம் முன்பு மெட்ராஸ் துறைமுகம் என்று அழைக்கப்பட்டது, இது இந்தியாவின் இரண்டாவது பெரிய  கண்டெய்னர் port ஆகும், இது வங்காள விரிகுடாவில் உள்ள மிகப்பெரிய துறைமுகம் ஆகும் அதேபோல் மூன்றாவது பழமையான பெரிய துறைமுகமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் முக்கிய காரணமாகும்.

இரண்டாவது தூத்துக்குடி துறைமுகம் முன்பு Tuticorin என்று அழைக்கப்பட்டது தூத்துக்குடிக்கு “முத்து நகரம்” என்று பெயர்,முத்து மீன் பிடிப்பு இதற்கு காரணம்.

அதேபோல் மூன்றாவதாக எண்ணூர் துறைமுகம் தற்போது காமராஜர் port லிமிடெட் என்று அழைக்கப்படுகிறது, இது சென்னை துறைமுகத்திற்கு வடக்கே பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ளது, இந்த துறைமுகம் இந்தியாவின் பன்னிரண்டாவது பெரிய துறைமுகமாகும். இந்த துறைமுகம் இந்தியாவின் முதல் கார்ப்பரேட் செய்யப்பட்ட(corporatised)துறைமுகமாக அறியப்படுகிறது, இதில் 86 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர் இது ஒரு செயற்கை ஆழ்கடல் துறைமுகம் ஆகும்.