Yuvan Chwang Visited Tamilnadu Kanchi –ஒரு சீன பௌத்தவ துறவி தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பார்க்க வந்தார் யார் அவர்?
யுவான் சுவாங் சீனாவின் ஹெனானில் உள்ள லுயோயாங்கில் பிறந்தார்,இளம் வயதிலேயே புனித நூல்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார், 13 ஆம் வயதில் குருவாகவும் 20 வயதில் முழு துறவியாகும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
மேற்கிலிருந்து சீனாவிற்கு வந்த புத்த நூல்களின் முழுமையற்ற மற்றும் சிதைந்த தன்மையை அவர் விரைவில் அறிந்தார், நூல்களை மீட்டெடுப்பதற்காக அவர் இந்தியா செல்ல விரும்பினார், 629 இல் யுவான் சுவாங் ஒரு கனவு கண்டார் அது இந்தியாவுக்கு செல்லும்படி வற்புறுத்தியது.
அதன் பிறகு சீன பௌத்தவ துறவி சுமார் 17 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணம் செய்த பயணி ஆவார், அப்பொழுதுதான் AD640ல் காஞ்சிபுரத்தை கண்டார்