Agasthiyar Koodam Agasthiyar Malai Facts And Information?

Agasthiyar Koodam Agasthiyar Malai Facts And Information? அகஸ்தியர் கூடம் “அகஸ்தியர் மலை” என புகழ் பெற்ற மலை எங்கு உள்ளது?

அகஸ்தியர் கூடம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலும் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிகரங்களின் ஒன்றாகும்.

அகத்தியமலை உயிர்க்கோள காப்பகத்தின் biosphere reserves ஒரு பகுதியாகும், இந்த காப்பகம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது.

வற்றாத தாமிரபரணி ஆறு மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் இருந்து தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆறு பாய்கிறது சுமார் 1868 மீட்டர்  உயரம் கொண்டுள்ளது.

அகஸ்தியர் கூடம் என்பது இந்து புராணங்களின் ஏழு ரிஷிகளில் அதாவது சப்தரிஷி ஒருவராக கருதப்படும், இந்து முனிவர் அகஸ்தியரின் பக்தர்களுக்கான ஒரு புனித யாத்திரை மையமாக கருதப்படுகிறது.

தமிழ் மரபுகளில் அகத்தியர் தமிழ் மொழியின் தந்தையாகவும் அகத்தியம் எனப்படும் தமிழ் இலக்கணத்தை தொகுத்தவராகவும் கருதப்படுகிறார், இதனால் சிகரத்தின் உச்சியில் உள்ள ஒரு சிறிய கல்லில் அகத்தியர் சிலை பொறிக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் பூஜை செய்யலாம் மார்ச். 2016 யுனிஸ்கோ 20 புதிய தலங்களில் அகஸ்தியர் மலையும் உயிர்க்கோள காப்பகத்தில் இணைத்தது.