Bharat Ratna Award Facts? பாரத ரத்னா விருது என்றால் என்ன?
பாரத ரத்னா- Jewel Of India என்பது இந்திய குடியரசின் உயரிய சிவிலியன் விருதாகும், 2 ஜனவரி 1954 இல் நிறுவப்பட்டது.
இந்த விருது இனம், தொழில், பதவி மற்றும் பாலின வேறுபாடு இன்றி மிக உயர்ந்த செயல்திறனுக்கான/ விதிவிலக்கான சேவைகளுக்கு அங்கீகாரமாக வழங்கப்படுகிறது.
முதலில் இந்த விருது கலை, இலக்கியம்,அறிவியல் மற்றும் பொது சேவைகளில் உள்ள சாதனைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன அதன் பின் டிசம்பர் 2011 க்கு பிறகு மனித முயற்சி எந்தத் துறையிலும் செயல்திறனுக்கான/ விதிவிலக்கான சேவைகளுக்கு என அளவுகளை விரிவு படுத்தியது.