India’s Oldest High Court? Madras High Court இந்தியாவின் மூன்றாவது பழமையான உயர் நீதிமன்ற விவரங்கள்?
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்- இந்தியாவில் உள்ள ஒரு உயர் நீதிமன்றம் ஆகும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மேல்முறையீட்டு அதிகார வரம்பை கொண்டுள்ளது, இது சென்னையில் அமைந்துள்ளது.
கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு பிறகு மூன்றாவதாக சென்னை உயர்நீதிமன்றம் பழமையான நீதிமன்றம் ஆகும்.
ஜூன் 26 1862 ஆம் வருடம் விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட காப்புரிமையின் மூலம் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று பிரசிடென்சி நகரங்களில் நிறுவப்பட்ட காலனித்துவ இந்தியாவின் 3 உயர் நீதிமன்றங்களில் ஒன்றாகும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை மீதான அதிகார வரம்பையும், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளையும், காப்புரிமை மற்றும் இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள ரிட்(Writ) வழங்குவதற்கான அதிகார வரம்புகளையும் கொண்டுள்ளது.
சுமார் 107 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ள இந்த நீதிமன்ற வளாகம் உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது, முதலாவதாக UK உச்ச நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 74 நீதிபதிகள் மற்றும் ஒரு தலைமை நீதிபதியை கொண்டுள்ளது.