Princess Of Hill station Kodaikanal Facts- கொடைக்கானல் மலைப்பிரதேசங்களின் இளவரசி என புகழ்பெறும் கொடைக்கானலின் சிறப்புகள்?
கொடைக்கானல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைவாழ் தளமாகும் இதன் பெயர் “காட்டின் பரிசு” என பொருள்படும் இதனை Princess Of Hill station என குறிப்பிடப்படுகிறது.
முதன் முதலில் கொடைக்கானலில் பழையர் பழங்குடியின மக்கள் கொடைக்கானலில் வசித்ததாகவும் தமிழ் சங்க ஆரம்ப கால இலக்கியங்களில் கொடைக்கானல் மற்றும் பழனி மலைகளின் குறிப்புகள் காணப்படுகின்றன, அதன் பின் நவீன கொடைக்கானல் 1845 ஆம் வருடம் அமெரிக்க கிறிஸ்தவ சங்கமும் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளால் புகலிடமாக நிறுவப்பட்டது.
அதனை அதிக வெப்பநிலை மற்றும் வெப்பமண்டல இடம் என குறிப்பிடப்பட்டன, அதன்பின் இருபதாம் நூற்றாண்டில் ஒரு சில இந்தியர்களின் முயற்சிகளால் பலர் அந்த மலைவாழ் தளத்தில் குடியேற தொடங்கி இப்பொழுது 2011ன் கணக்கீட்டின்படி அந்நகரத்தின் மக்கள் தொகை 36 ஆயிரத்து 501 பேரை கொண்டுள்ளது.
அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் சுற்றுலா துறைக்கு வரும் மக்களின் விருந்தோம்பலை துறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது அங்குள்ள கொடைக்கானல் ஏரி சுமார் (3.1Mile) 5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டுள்ள ஏரி முழுவதும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி ஆகும்.
அங்கு யூனிலீவரின் இந்திய துணை நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவருக்கு சொந்தமான பாதரச தொழிற்சாலை மாசு பிரச்சனையால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்படுவதால் அதனை மூடப்பட்டன, ஆனால் இன்று வரை துப்புரவு பணிகள் அங்குள்ள பாதரசக் கழிவுகளை இன்று வரை அகற்றப்படவே இல்லை என பல குறிப்புகளும் உள்ளன.