Vellore Jalakanteshwara Temple Specialties? Part-2

Vellore Jalakanteshwara Temple Specialties? Part-2

இப்பொழுது வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டைக்குள் செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் மற்றும் திப்பு மஹால், ஹைதர் மஹால்,கேண்டி மகால், பாதுஷா மஹால் மற்றும் மேகம் மஹால் ஆகியவற்றுடன் விஜயநகர் காலத்து கோவில் உள்ளது.

ஏன் இவ்வளவு முஸ்லிம் மசூதிகள் உள்ளன?

முஸ்லிம் படையெடுப்பின் போது வேலூர் கோட்டை கைப்பற்றப்பட்டது அதேபோல் கோயிலை இழிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து கோயில் வழிபாடு நிறுத்தப்பட்டது, அங்கிருந்த நாகாத்தம்மன் கோயிலை அழித்த பிறகு அதனை தற்காலிக மசூதியாக இஸ்லாம் அமைப்பு மாற்றியது.

இக்கோயில் கிட்டத்தட்ட 400 வருடங்களாக ஆயுதத்கிடங்களாக பயன்படுத்தப்பட்டது பல அவமதிப்பு அச்சத்தின் பிறகு பிரதான தெய்வத்தை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜலகண்டே விநாயகர் கோயிலுக்கு மாற்றப்பட்டது, ஏறத்தாழ 400 வருடங்களாக இந்த கோயில் காலியாகவே இருந்தது.

அதன் பின் 1921 ஆம் வருடம் வேலூர் கோட்டையை பராமரிப்புக்காக இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது, அப்பொழுதும் கோயிலுக்கு பூஜைகள் இல்லை அதன் பின் 1981 ஆம் வருடம் தங்கல் ஆசிரமத்தைச் சேர்ந்த “குருஜி மயிலம் சுந்தரம்” அவர்களால் மீண்டும் தெய்வத்தை கோட்டைக்குள் கொண்டுவரப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.