Kadappa District Facts & Information
- கடப்பா மாவட்டம் அதிகாரப்பூர்வமாக ஒய்எஸ்ஆர்(YSR) மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது, இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராயலசீமா ம்ம பகுதியில் உள்ள 8 மாவட்டங்களில் ஒன்றாகும்.
- 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஓ.எஸ் ராஜசேகர் ரெட்டி நினைவாக இது ஒய் எஸ் ஆர் மாவட்டமாக மறுபெயரிடப்பட்டது.
- இம் மாவட்டத்தில் மொத்த பரப்பளவு 4335 சதுர மைல்கள் ஆகும், இதில் நான்கு வருவாய் பிரிவுகளும், 51 மண்டலங்களும், 919 கிராமங்களும், 18 நகரங்களும் கொண்டுள்ளது.
- இம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 20 லட்சத்து 60 ஆயிரத்து 654 கொண்டுள்ளது. அதில் 39 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
- ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது, பட்டியல் சாதிகள் 16 சதவீதமும் ஒரு சதவீதம் பழங்குடியினரும் உள்ளனர்.
- இங்கு 84.66% மக்கள் தெலுங்கையும், 14 சதவீத மக்கள் உருது மொழியையும் முதல் மொழியாகப் பேசுகின்றனர்.
- இம் மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 26 ஆயிரத்து 342 கோடி,மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 5% பங்களிக்கிறது.