Kakinada District Facts & Information
காக்கிநாடா மாவட்டம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது காக்கிநாடா நகரை நிர்வாக தலைமையகமாக ஜனவரி 26 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டு 4 ஏப்ரல் 2022-ம் வருடம் உருவாக்கப்பட்டது.
கிழக்கு கோதாவரி மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மற்றும் பெத்தாபுரம் வருவாய் கோட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டது, இதற்கு முன்பாகவே பழங்காலத்தில் இருந்து பித்தாபுரம், காக்கிநாடா, பெத்தாபுரம் ஆகிய இடங்களை பொதுவாக போல்நாடு என்றும் ப்ரோலுநாடு என்றும் குறிப்பிடப்பட்டது, இப்பொழுது இப்பகுதிகள் மாவட்டத்தில் ஒத்துள்ளது.
மாவட்டத்தில் இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன ஒன்று காக்கிநாடா மற்றும் பெத்தாபுரம் அதேபோல் 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதிகளும் 7 சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டுள்ளது.
2011 ஆம் மக்கள் தொகையின் கணக்கெடுப்பின் படி 20,92,324 மக்கள் தொகை கொண்ட காக்கிநாடா மாவட்டம் 31% மக்கள் நகர நகர்புறங்களில் வாழ்கின்றனர், இங்கு ஆயிரத்து எழு பெண்களுக்கு ஆயிரம் ஆண்கள் என பாலின விகிதங்கள் உள்ளன.
அதேபோல் பட்டியல் இனத்தவர் 15 சதவீதமும் மற்றும் பழங்குடியினர் 1.47 சதவீதமும் உள்ளனர், அதேபோல் 2011 கணக்கீட்டின்படி சுமார் 98.41% மக்கள் தெலுங்கு மொழியையும் 1.14 சதவீத மக்கள் உருது மொழியையும் முதல் மொழியாக கடைபிடிக்கின்றனர், காக்கிநாடா மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1165 83 சதுர மைல் ஆகும்.