Anantapur District 8 Important Fact & Information
- ஆனந்த்பூர் மாவட்டம் அதிகாரப்பூர்வமாக அனந்தபுரமு மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது, இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராயல் சீமா பகுதியில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும் மாவட்டத்தின் தலைமையகம் அனந்தபூர் நகர் ஆகும்.
- இது தென்னிந்தியாவின் மிகவும் வறண்ட இடங்களில் ஒன்றாகும், அனந்தப்பூர் என்ற பெயர் ஆனந்த சாகரா என்ற பெரிய தொட்டியின் பெயரால் பெயரிடப்பட்டதுஎன்று சொல்லப்படுகிறது, விஜயநகரப் பேரரசின் நிறுவனர்களில் ஒருவரான புக்கராயனின் மனைவி ஆனந்தம்மாவின் பெயரால் பெயரிடப்பட்டது என கூறப்படுகிறது.
- மாவட்டத்தில் மொத்த பரப்பளவு 3,940 சதுர மைல்கள் ஆகும் மாவட்டத்தின் மக்கள் தொகை 22 லட்சத்து 41,105 ஆகும், அதில் 33 சதவீதம் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
- இம் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 978 பெண்கள் என பாலின விகிதம் உள்ளன, பட்டியல் சாதிகள் 14 சதவீதமும் பழங்குடியினர் மூன்று சதவீதம் உள்ளனர்.
- 84.59 சதவீத மக்கள் தெலுங்கையும், 9.64 சதவீத மக்கள் உறுதுவையும் ,மூன்று சதவீதம் கன்னடமும் ஒரு சதவீதம் லம்பாடி மொழியை முதல் மொழியாக பேசுகின்றனர்.
- இம் மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 35 ஆயிரத்து 838 கோடி ரூபாயாகும், இது மாநிலத்தின் ஆறு சதவீதம் பங்களிக்கிறது.
- மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன அனந்தபூர், குண்டக்கல் மற்றும் கல்யாணதுர்க், இந்த வருவாய் கோட்டங்கள் மேலும் 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.